கல்லணை: காரில் சென்றவரிடம் நகை பறிப்பு

63பார்த்தது
கல்லணை: காரில் சென்றவரிடம் நகை பறிப்பு
கல்லணை அருகே செம்பியன்கிளறிகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்மகன் மனோஜ் (35). இவர் நேற்று முன்தினம் இரவு காரில் கல்லணை நோக்கிச் சென்றபோது செய்யாமங்கலம் மலைவாசன் வீட்டருகில் செய்யாமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்த லட்சுமணன் மகன்கள் சஞ்சீவி (36), மகாதேவன் (30), திருப்பதி (29) ஆகியோர் காரை வழிமறித்து, கட்டையால் கார் கண்ணாடியை உடைத்து, மனோஜ் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து மனோஜ் தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிவு செய்து சஞ்சீவி மற்றும் மகாதேவனை கைது செய்தார். தப்பிஓடிய திருப்பதியைத் தேடி வருகிறார்.

தொடர்புடைய செய்தி