திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சடை வளந்தை வடக்கு ஆதிதிராவிடர் தெரு பழனியாண்டி மகன் நடராஜன் (68). இவர் குடிப்பழக்கம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மதியம் வீட்டில்குடிபோதையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குஅவருக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் திங்கள் கிழமை (அக். 9) அதிகாலை 4. 30 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி உஷா திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.