பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

62பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே (புதகிரி) வானராங்குடியில் மதுரகாளியம்மன்கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகின்றது. திருக்காட்டுப்பள்ளி அருகே (புதகிரி)வானராங்குடியில் மதுரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் ஊர் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பெறும். அது போல இவ்வாண்டும் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். அப்படி எடுத்துவரப்பட்ட பால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை கிடாவெட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது விழா ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம பொதுமக்களும் செயல்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி