திருக்காட்டுக்குள்ளி அருகே கோவிலடி பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் கமலவள்ளி சமேத அப்பால ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது. புரட்டாசி 3ம் சனிக்கிழமை முன்னிட்டு சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாய்ந்தார். இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், கிராம மக்கள் மேற்கொண்டிருந்தனர்.