காவிரி தண்ணீர் திருக்காட்டுப்பள்ளியை கடந்தது.

73பார்த்தது
கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர்  திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றது.

இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர்  30ம் தேதி இரவு கல்லணையை வந்தடைந்தது. 31ம்தேதி காலை தமிழக அமைச்சர்கள் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கயல்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீரை திறந்து விட்டனர்.   அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றது. காவிரி பாலத்தில் அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டு சீறி பாய்ந்து சென்று தண்ணீரை பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தொடர்புடைய செய்தி