திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம்

52பார்த்தது
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம்
திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். நாடெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு. 

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜன. 14-ம் தேதி துவங்கி 18-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆராதனை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் தியாகப்பிரும்ம மகோத்சவ சபாவின் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், எஸ். கணேசன், எம். ஆர். பஞ்சநதம், டெக்கான் என். கே. மூர்த்தி, பொருளாளர் ஆர். கணேஷ், உதவி செயலாளர் கே. என். ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கமாக ஜன. 14-ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசை, துவக்கவிழா நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி