தஞ்சாவூர் செஞ்சிலுவை சங்கம் திருவையாறு ஒன்றிய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கல்லணையிலிருந்து காவிரில் அதிகமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை
தஞ்சாவூர் செஞ்சிலுவை சங்கம் திருவையாறு ஒன்றிய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கல்லணையிலிருந்து காவிரில் அதிகமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக்கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவையாறு ரெட்கிராஸ் தலைவர் முனைவர் கலைவேந்தன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பயோகேர் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் அந்தோணிசெல்வம், இளங்கோவன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி மகாராஜபுரம், சாத்தனூர், ஆச்சனூர், வடுககுடி, மருவூர், புனவாசல், வைத்தியநாதன்பேட்டை மற்றும் காவிரி கரையோரம் உள்ளடக்கிய பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து காவிரி ஆற்றில் பொது மக்கள் குளிக்கவோ, ஆடு , மாடுகளை மேய்க்கவோ, தண்ணீரில் போய் விளையாடா கூடாது என்று அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.