தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் திருவையாறு தென்னை விஞ்ஞானி டாக்டர் வா. செ. செல்வம் அறக்கட்டளை சார்பில் விருது மற்றும் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை திருவையாறு கோகோஸ் தொழிலகம் மற்றும் அறக்கட்டளை நிறுவுனர் வா. செ. செல்வம் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மூத்தக் குடிமக்கள் நலச் சங்க நிறுவனர் புலவர் ஆதி. நெடுஞ்செழியனுக்கு தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் டி. சேகர் படைப்பாளர் விருது வழங்கினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். வேளாண் துறை அலுவலர் வா. செ. ஜெய்ஜிபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்றார். நிறைவாக, இணைப் பேராசிரியர் ஞா. பழனிவேலு நன்றி கூறினார்.