திருவையாறு அதிமுக சார்பில் நகராட்சியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ரத்தினசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சிவபதி ஆய்வு மேற்கொண்டார். இதில் திருவையாறு நகர செயலர் செந்தில்மணி, ஒன்றிய செயலர்கள் சூரியபிரகாஷ், இளங்கோவன், ராஜா மற்றும் வார்டு செயலர்கள், நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்ளவது என்பது குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.