தஞ்சையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சையில் மார்பக புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வகித்தார் ஆட்சியர் பிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார் நிலைய மருத்துவ அலுவலர்கள் செல்லம், அமுதவடிவு, மருத்துவர்கள் ஜெகதீசன், மாரிமுத்து, ஜீவராமன், சுமதி, முத்துவிநாயகம், ராமச்சந்திரன், கார்த்திகேயன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம். மருத்துவ மாணவர்கள் செவிலிய மாணவிகள், மார்பக புற்றுநோய் கண்டறிதல் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மார்பகப் புற்று நோய் அறிகுறிகளை தொடக்க நிலையிலே கண்டறிந்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மார்பகப் புற்றுநோய் வராமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.