தஞ்சாவூர் - Thanjavur City

போக்குவரத்து கழக பணிமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை

போக்குவரத்து கழக பணிமனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகப்பட்டினம் மண்டலம், பொறையாறு பணிமனையில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஓய்வறை கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலியானார்கள்.   இதையொட்டி ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை பணிமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த. காரல் மார்க்ஸ், ஏஐடியூசி பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சியில், கும்பகோணம், நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட 21 பணிமனைகள், தலைமை அலுவலகங்களில் உள்ள அலுவலகம், ஓய்வறை, குளியலறை, கழிவறைக் கட்டிடங்களை வருடம் தோறும் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். தஞ்சாவூர் நகர் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் பழைய கட்டிடங்களில் மழைக்காலங்களில் நீர் தேங்கி ஒழுகுவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது சரி செய்யப்பட வேண்டும்.    தமிழ்நாடு அரசு தேவையான நிதி உதவியை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அளிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை மதிவாணன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా