தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சார்பில் உலகத் தாய் மொழி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்து பேசுகையில், தமிழிலேயே கையொப்பமிடுதல், பெயரின் முதல் எழுத்தைத் தமிழிலேயே எழுதுதல், கைப்பேசியின் குறுஞ் செய்திகளைத் தமிழ்மொழியிலேயே பகிர்ந்து கொள்ளுதல் என இளம் சமூகத்தினராகிய மாணவர்கள் தாய்மொழி உணர்வோடு திகழ வேண்டும் என்றார் அவர்.
எழுத்தாளர் சூர்யா சேவியர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மொழிப்புலத் தலைவரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக் பள்ளியின் தலைவருமான ச. கவிதா வரவேற்றார். துறையின் இணைப்பேராசிரியர் சி. சாவித்ரி நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் த. சிவக்குமார் இணைப்புரை வழங்கினார்.