தஞ்சாவூரில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை

74பார்த்தது
தஞ்சாவூரில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை
தஞ்சாவூரில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ஸ்ரீராம் (21). இவர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடையில் திங்கள்கிழமை இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அக்கடை முன் இரு சக்கர வாகனங்களில் 6 மர்ம நபர்கள் வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் ஸ்ரீராம் கடையிலிருந்து வெளியே வந்து தப்பியோட முயன்றார்.  


ஆனால், ஸ்ரீராமை மர்ம நபர்கள் சில அடி தொலைவில் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர். இதனால், பலத்த காயமடைந்த ஸ்ரீராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பி. என். ராஜா (தஞ்சாவூர் நகரம்), நித்யா (வல்லம்) உள்ளிட்ட காவல் அலுவலர்கள், காவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தற்போதைய கொலை நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி