தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை வடக்கு நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் மனைவி சரிதா (50). சரிதாவின் மகள் திருமணத்துக்கு தனது உறவினர்கள் வீடுகளில் பத்திரிக்கை வைத்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது திடீரென மழை பெய்தது.
அப்போது கண்ணந்தங்குடி மேலையூர் வண்டி பாலம் பகுதியில், சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சிலர் நின்று கொண்டு இருந்த நிலையில் சரிதாவும் மழைக்காக ஒதுங்கியுள்ளார். அப்போது சரிதா மீது மின்னல் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முருகேசன், சங்கர் சேகரன், சீதாலட்சுமி உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் அவசர ஊர்தி அழைத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஓரத்தநாடு போலீ ஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.