அடிக்கடி இடம் மாற்றப்படும் முன்பதிவில்லா பெட்டிகள்

665பார்த்தது
அடிக்கடி இடம் மாற்றப்படும் முன்பதிவில்லா பெட்டிகள்
மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில் முன்பதிவு இல்லா பெட்டிகளை ரயில் இன்ஜின் அருகிலும் இறுதியிலும் என அடிக்கடி இடம் மாற்றுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கு தினமும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஏசி முன்பதிவு பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகள் என 20 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் தினசரி தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கும் ஏராளமான சென்று வருகின்றனர். இந்த ரயிலில் இரண்டு அல்லது மூன்று முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படுவது வழக்கம். மூன்று பெட்டிகள் எனில் ரயில் இன்ஜின் அருகில் ஒரு பெட்டியும், இறுதியில் இரண்டு பெட்டிகளும் இணைக்கப்படும். இரண்டு பெட்டிகள் என்றால் ஒன்று எஞ்சின் அருகிலும் இறுதியிலும் ஒரு பெட்டி இணைக்கப்படும். சில நாட்களில் இந்த முன்பதிவு இல்லா பெட்டிகள் அனைத்தும் எஞ்சின் அருகிலோ அல்லது ரயிலின் இறுதியிலோ இணைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி