அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை மோசடி நபரிடம் ஏமாந்த பெண்

71பார்த்தது
அரசு வழங்கிய கொரோனா நிவாரணத்தை மோசடி நபரிடம் ஏமாந்த பெண்
தந்தையை அடுத்த கல்விராயன்பேட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி, இவரது கணவர் மந்திரி குமார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தாய் தந்தையை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைக்கு ரூபாய் 3 லட்சமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மகேஸ்வரியின் குழந்தை மகாலட்சுமியின் வங்கி கணக்கு 2022 ஆம் ஆண்டு மூன்று லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டது. மகளின் எதிர்கால தேவை கருதி மகேஸ்வரி பணத்தை எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஸ்வரியின் செல்போன் என்னை தொடர்பு கொண்ட நபர், வங்கி மேலாளர் பேசுகிறேன். ஏடிஎம் காலாகி காலாவதியாகிவிட்டது. எனவே புதிய ஏடிஎம் கார்டு அனுப்ப தகவல் வேண்டும் என மோசடியாக கூறி அவரிடம் இருந்து பல விவரங்களை கேட்டுள்ளார். இதை மகேஸ்வரி தெரிவித்ததும் ஓடிபி எண் வந்துள்ளது. அந்த ஓடிபி எண்ணை சொன்னதும் அவரது வங்கி கணக்கில் இருந்த பணம் 3 லட்சம் பறிபோனது இதுகுறித்து ஏமாந்த அவர் சைபர் கிராம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திற்கு மகேஸ்வரி தனது உறவினர்களுடன் வந்து ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதில் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி