கணவர் இறந்த வேதனையில் மனைவியும் சாவு

1888பார்த்தது
கணவர் இறந்த வேதனையில் மனைவியும் சாவு
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்காள வாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (வயது 43). கட்டிடத்தொழிலாளி. கட்டிட தொழில் இல்லாத நேரங்களில் தஞ்சையில் உள்ள ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (33). இவர்களுக்கு சத்தியஸ்ரீ, லாவண்யா ஆகிய இரு மகள்களும், சந்துரு என்ற மகனும் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மல்லிகா தனது குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மெய்யழகன் மட்டும் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இரவு சைக்கிள் ஸ்டாண்டுக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்த மெய்யழகன் வீட்டில் படுத்து தூங்கியவர் மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்த போது மெய்யழகன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவகங்கையில் இருந்த மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லிகா கதறியடித்துக்கொண்டு குழந்தைகளுடன் தஞ்சைக்கு வந்தார். அவர் மற்றும் குழந்தைகள் கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து மெய்யழகன் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச்செல்லும் போது மல்லிகாவும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி