தஞ்சையில் அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம்

80பார்த்தது
தஞ்சையில் அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம்
தஞ்சாவூர் நகரில் பல்வேறு இடங்களில் சரக்கு ஆட்டோக்களில், தள்ளு வண்டிகளிலும் வைத்து அன்னாசிப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து இரண்டரை கிலோ அன்னாசி பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்னாசிப்பழம் உடல் நலத்துக்கு உகந்தது. கெட்ட கொழுப்புகளை அகற்றும். மருத்துவ பலன்கள் உள்ளது. சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய அன்னாசி பழங்கள் கேரளா, கொல்லிமலை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிற்சி செய்யப்படுகின்றது. கொல்லிமலையில் பயிரிடப்பட்ட அன்னாசி பழங்கள் தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இரண்டரை கிலோ எடையுள்ள அன்னாசிப்பழம் ரூபாய் 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்னாசி பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தஞ்சை மாநகரில் மருத்துவக் கல்லூரி சாலை, ரயிலடி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களில் அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலையில் மொத்தமாக வாங்கி வந்து அன்னாசி பழங்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இரண்டு சிறிய பழங்கள் ரூபாய் 50க்கும்,. எடை கணக்கில் 2 1/2 கிலோ எடையுள்ள அன்னாசி பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களும் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி