தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் தங்க
அண்ணாமலை (வயது55), தி. மு. க. பிரமுகரான இவர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா என்பவர்
அண்ணாமலை போட்டு இருந்த வேலியை சேதப்படுத்தி, அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக திட்டியதாகவும் கூறப்படுகிறது அங்கு வந்த
அண்ணாமலை ஏன் இப்படி திட்டுறீங்க என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சபாபதி மற்றும் அவரது மனைவி ராதா ஆகியோர் அண்ணாமலையை கல்லால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு
அண்ணாமலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.