தஞ்சை: 20 உடல்களை நல்லடக்கம் செய்த போலீஸார்

6பார்த்தது
தஞ்சை: 20 உடல்களை நல்லடக்கம் செய்த போலீஸார்
தஞ்சாவூர் நகரில் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி, தாலுகா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களில் இறந்த 13 ஆண்கள், 7 பெண்கள் என 20 பேரின் உடல்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த 20 உடல்களையும் அடக்கம் செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் 20 உடல்களையும் மாநகராட்சி பணியாளர்கள் உதவியுடன் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம், காவல் ஆய்வாளர் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனோகரன், கார்த்திக், தலைமை காவலர் சுந்தரமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், நகர் நல அலுவலர் நமச்சிவாயம், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்களை தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி