தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள பூஜா மஹாலில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் ஓவியம் செயல் விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மராட்டிய வம்சத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, ராகவன் போன்ஸ்லே உள்ளிட்டோர் தஞ்சாவூர் ஓவியத்தின் பாரம்பரியம், நுட்பங்கள், தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கினர். இதில், தஞ்சாவூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தார்.