எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன் வாரி 20, 21 வார்டு சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) வார்டு தலைவர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் KTM. அப்துல் அஜீஸ் மற்றும் தஞ்சை தொகுதி தலைவர் முகமது ரபீக் உட்பட்ட அனைத்து வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர். இதில் 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.