தஞ்சை மாவட்டத்தில் மூன்று போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு தேவையான உரம் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1,300 டன் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.