தஞ்சையில் கல்வி அலுவலர்களை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
தஞ்சையில் கல்வி அலுவலர்களை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தஞ்சாவூர் மாவட்டக் கிளையின் சார்பில்,   தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு, பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம்,   திருவோணம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் மான்விழி ஆகியோரின் ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கு, பாலியல் ரீதியான அச்சுறுத்தல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அலுவலக முறைகேடுகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மதியழகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். டி. என். பி. டி. எஃப் மாநிலத் தலைவர் மணிமேகலை கண்டன உரையாற்றினார்.  
மாநில பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெங்கசாமி, ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், இதயராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  
மாநிலச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஸ்ரீதர், மார்கோனி கோரிக்கை விளக்க உரையாற்றினர்.  
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதிலிருந்தும் பெருந்திரளான ஆசிரிய, ஆசிரியைகளும், மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, மேற்கண்ட அலுவலர்களின் ஆசிரியர் விரோத செயல்பாடுகளை கண்டித்து, இருவர் மீதும் பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி