பணிநிரந்தரம் செய்ய டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

55பார்த்தது
பணிநிரந்தரம் செய்ய டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
டாஸ்மாக் பணியாளர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் கோடீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வருமானத்தில் டாஸ்மாக் வருவாய் என்பது முக்கிய பங்கு வகித்து வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 21 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் கிடையாது. எனவே டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 2ம் தேதி தஞ்சையில் மாநில மாநாடு நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி