மாணவ, மாணவிகளுக்கு கோடை பயிற்சி நிறைவு

174பார்த்தது
மாணவ, மாணவிகளுக்கு கோடை பயிற்சி நிறைவு
தஞ்சை மாவட்ட மைய நூலகம் சார்பில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த 14-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தினமும் காலை 1 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டி, ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், சுண்டாட்டம், குதியாட்டம், சதுரங்கம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம், சொக்கட்டான், அழகிய தமிழ்க் கையெழுத்துப் போட்டி, அழகிய ஆங்கிலக் கையெழுத்துப் போட்டி, கதை சொல்லல், சிலம்பம், கோலம், கும்மி, கோலாட்டம் முதலான போட்டிகளும், கைவினைப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கோடை கொண்டாட்டத்தின் 4-ம் நாளன்று சிறுவர் சிறுமியர்களுக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதனை தஞ்சை மாவட்ட நூலக அலுவலர் முத்து தலைமையில் வாசகர் வட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், அரசு வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், சதய விழாக் குழுத்தலைவர் து. செல்வம் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்ச்செல்வன், கதிர்வேல், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பரணீஸ்வரி ஆகியோர் நடுவராக இருந்து சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்தனர். புலவர்கந்தசாமி, திருக்குறள் அன்பரசி, டோமினிக் சேகர், கவிஞர் பஞ்சாட்சரம், சுரேஷ், துரைராஜ் ஆகியோர் கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகளில் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர் இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற சிறுவர்களுக்கான கதை சொல்லல் போட்டியிலும், ஓவியம் வரைதல் போட்டியிலும் 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நூலக வாசிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நூலகக் கண்காணிப்பாளர் கதிரேசன், மற்றும் பலர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி