நகர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் ஆய்வுக்கூட்டம்

1226பார்த்தது
நகர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் ஆய்வுக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட நகர கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் நடந்தது.

தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவமலர் தலைமை வகித்தார். ஆய்வுக் கூட்டத்தில் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ் நங்கை, கும்பகோணம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர்கள் பெரியசாமி, பழனீஸ்வரி, திருவாரூர் மண்டல இணைப் பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் மண்டல இணைப்
பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல் மஜீத், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் ஜெகத்ரட்சகன், பட்டுக்கோட்டை சரக துணைபதிவாளர் சுவாமிநாதன், நகர கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சி, கடன் வரவு, பாக்கி மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி