தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, மாவட்ட தொடர்பு அலுவலர், பெற்றோர் ஆசிரியர், கழகத்தலைவர் ரதிகிருஷ்ணன், தணிக்காசலம் (ஓய்வு பெற்ற டி. எஸ். பி), ஊராட்சி மன்றத்தலைவர் சித்ரா மகேந்திரன் மற்றும் பலர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணிகள், நெகிழி விழிப்புணர்வு பேரணி மற்றும் கைத்தொழில் பற்றி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. முகாமில் மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.