தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் பூஞ்சேரி குடியான தெருவில் வசிப்பவர் செந்தில்குமார் மகள் வர்ஷினி (15) இவர் பசுபதி கோவில் தனியார் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரை வீட்டில் உள்ளவர்கள் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்குமாறு அறிவுறுத்தினர்.
ஹாஸ்டலில் தங்க விரும்பாமல் பயந்த நிலையில் இருந்த வர்ஷினி விஷம் குடித்து மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கபிஸ்தலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.