தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அருகிலுள்ள கிராம மக்களுக்கு இலவச இதய மற்றும் கண் மருத்துவ ஆலோசனையுடன் கூடிய சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 29ஆம் தேதியும், கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் 30ஆம் தேதியும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர் மூர்த்தி மற்றும் குழுவினர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை தஞ்சை கும்பகோணம் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ ஆகியவை இலவசமாக எடுக்கப்படும். குறிப்பிட்ட சில மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். சிகிச்சைக்கு வரும்போது உங்களது மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து கோப்புகளையும் எடுத்து வர வேண்டும்.
பயனாளிகளின் பெற்றோர் அரசு பணியாளராக இருக்கக் கூடாது. இலவச மருத்துவ முகாமில் சிகிச்சை பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், வயது, ஊர் ஆகியவற்றை தஞ்சை மருத்துவ முகாமுக்கு 9443904515, கும்பகோணம் மருத்துவ முகாமுக்கு 9942131186 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.