தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோடியம்மன் கோவில் அருகே மெயின் ரோட்டில் சறுக்கை பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனருகே குடிநீர் குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த இடம் குழியாக தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. வெண்ணாறு பம்பிங் ஸ்டேஷனிலிருந்து தஞ்சை மாநகருக்கு வரும் மெயின் குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியில் வரும் வாகனங்கள் குழியில் சிக்கி தவிக்கின்றன. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்து, குழியை மூடி தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.