திருவாயாத்துகுடி ஊராட்சி மன்ற கட்டிடம் திறக்க கோரிக்கை

54பார்த்தது
திருவாயாத்துகுடி ஊராட்சி மன்ற கட்டிடம் திறக்க கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் திருவையாத்துக்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்  பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால்  ஊராட்சி மன்ற அலுவலகம்  அருகில் உள்ள சுய உதவி குழு  கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த நிலையில் பழுதடைந்து பழைய  ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்திவிட்டு  ஊராட்சி மன்ற செயலகம்  கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வந்த நிலையில்  கட்டுமான பணி முடிவுற்று நான்கு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும்  ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது எனவே திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறந்து  பயன்பாட்டுக்கு  கொண்டு வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி