தஞ்சை கோடியம்மன் கோயில் பகுதியில் விரி வாக்கம் செய்ய சாலையின் ஓரத்தில் கடைகளின் ஆக் கிரமிப்புகளை அகற்றி அந்த கடைகளை வேறு இடத்தில் அமைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோருகின்றனர்.
தஞ்சை கோடியம்மன் கோயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. காரணம் இப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாக, இருந்தது. சாலை விரிவாக்கம் செய்ததால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து வந்தது குறைந்தது.
இந்நிலையில் சாலையின் ஓரங்களில் சிலர் கடைகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இந்த கடைகளை வேறு ஏதாவது ஒரு பகுதியில் கட்டிக் கொள்ள மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.