காவிரி நீர் திறப்பின்றி குறுவை பயிரிட இயலாத விவசாயிகளுக்கு காப்பீடு கிட்ட வரன்முறைப்படி இழப்பீடு கிடைப்பதற்கு வருவாய்த் துறையினர் உடனடியாக சான்று வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் பி. எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி,
தமிழகத்துக்கு கர்நாடக அரசு நிலை இருந்தால், காப்பீடு திட்ட இழப்பீடு அக்கிராம விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
காவிரி நீரை திறந்து விடாததால், டெல்டா மாவட்டங்களில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஆற்றுப் பாசன விவசாயிகள் குறுவை பயிரிட முடியாமல் பரிதவிக்கின்றனர்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், தொடர்புடைய வருவாய் கிராமத்தில் கடந்த இரு ஆண்டுகளிலும் குறுவை சாகுபடி செய்திருந்த மொத்த பரப்பளவில் 75 சதத்துக்கும் மேல் தற்போதைய நிலையில், சாகுபடி செய்ய இயலாத நிலை இருந்தால் காப்பீடு திட்ட இழப்பீடு அக்கிராம விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவே கர்நாடகத்தில் மனிதாபிமானமற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த உடனடியாக வருவாய்த் துறையும், வேளாண் துறையும் உரிய அறிவுரையை வழங்கி கிராம நிர்வாக அலுவலர் மூலம் அதற்கான சான்றுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.