தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி. எஸ். மாசிலாமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தேசிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், முல்லை, மாதவன், மாநில துணைத்தலைவர் துளசிமணி, துணை செயலாளர்கள் இந்திரஜித் கிருஷ்ணமூர்த்தி மாநில குழு உறுப்பினர்கள் இந்துமதி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். நிறைவாக தெற்கு மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன் நன்றி கூறினார். இதில், "டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக சம்பா, தாளடி, பருத்தி, உளுந்து, எள், பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்ததால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.