தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில், இயங்கி வரும் அரசுப் பள்ளி வகுப்பறையில், ரமணி (26) என்ற அரசுப் பள்ளி ஆசிரியை இன்று (நவம்பர் 20) காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்புக்குள் நுழைந்த பன்னீர்செல்வம் (எ) மதன் (30) என்பவர் ரமணியை குத்திக் கொன்றுள்ளார்.
ரமணியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்ததால் இக்கொடூரத்தை அரங்கேற்றியதாக தெரியவந்துள்ளது. பள்ளி மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் நடந்த இக்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியை குத்திக் கொன்ற பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.