தஞ்சாவூர்: குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் தண்டனை.. தொழிலாளர் நலத்துறை

51பார்த்தது
தஞ்சாவூர்: குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் தண்டனை.. தொழிலாளர் நலத்துறை
தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளர் நல துணை உதவி ஆணையர் ஆனந்தன் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், குளிர்பான விற்பனை நிலையங்கள் உட்பட மொத்தம் 66 நிறுவனங்களில், ஏதேனும் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா என மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு படையினருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குழந்தைத் தொழிலாளர் எவரும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அந்த நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

குழந்தைகளை பணிக்கு அமர்த்துவோருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபடுவது தெரியவந்தால் 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கோ அல்லது ஆட்சியர் அலுவலகம் அல்லது தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை 04362-264886 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி