பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 26. 98 லட்சம் காணிக்கை

57பார்த்தது
பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ. 26. 98 லட்சம் காணிக்கை
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ. 26. 98 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 7 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறைத் துணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் கோ. கவிதா, செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை  திறந்து எண்ணப்பட்டன.

இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ரூ. 26 லட்சத்து 98 ஆயிரத்து 967 காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும் 210 கிராம் வெள்ளியும், இருபத்தி நான்கரை கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி