கல்லூரியில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம்

147பார்த்தது
கல்லூரியில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம்
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக, காலனித்துவம் பின் நவீன காலனித்துவத்தின் நினைவுகள் என்ற தலைப்பில், தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.   இதில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்து பேசினார், கல்லூரி முதல்வர் மா. விஜயா, முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி, முதல்வர் ப. சுப்பிரமணியன் துணை முதல்வர்  ரா. தங்கராஜ் மற்றும் புலத்தலைவர் ஆராய்ச்சி கோ. அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.   ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கே. கார்த்திகேயன், ஆர். ஜெய்சிங் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழக, ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் எஸ். கார்த்திக்குமார், பெங்களுரு கிருஸ்து ஜெயந்தி கல்லூரியின் உதவிப்பேராசிரியர், எல். சந்தோஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.   முன்னதாக கல்லூரி ஆங்கிலத் துறைத்தலைவர் எம். சிவசங்கரி வரவேற்றார். நிறைவாக, பி. ஆனந்தன் நன்றி கூறினார்.   வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து,  350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி