தஞ்சாவூரில் இயற்கை வளங்கள்: துறை செயலர் ஆய்வு

80பார்த்தது
தஞ்சாவூரில் இயற்கை வளங்கள்: துறை செயலர் ஆய்வு
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கனிம வளத் துறை சார்பில் திருச்சி மண்டல அளவில் கனிமவளம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் செயலர் கே. பணீந்திர ரெட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கனிம வளத் துறை சார்ந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட் டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், கனிம வளத் துறை திருச்சி மண்டல இணை இயக்குநர் சுரேஷ், உதவி இயக்குநர்கள் சீனிவாசராவ் (தஞ்சாவூர்), ஆ. லலிதா (புதுக்கோட்டை), எஸ். முத்து (திருவாரூர்), பெர்னாட் (பெரம்பலூர்), எம். பாண்டியன் (மயிலாடுதுறை மற்றும் நாகை), பாலமுருகன் (திருச்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.