தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில், நுண்ணுயிரியல் துறை சார்பில், காளான் வளர்ப்பு மைய துவக்க விழா நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணைமுதல்வர் ரா. தங்கராஜ் மற்றும் விஞ்ஞானி ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பிரின்ஸ், கல்லூரி மேலாளர்
இரா. கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.