தஞ்சை: கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
தஞ்சை: கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும். பணி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். மாவட்டத் தலைவர் எம். புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி