தஞ்சையில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா எம்எல்ஏ பங்கேற்பு

83பார்த்தது
தஞ்சையில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா எம்எல்ஏ பங்கேற்பு
தஞ்சை எலிசா நகர் இசிஐ தேவாலயத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் தஞ்சை மத்திய மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆகியோர் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா தஞ்சையில் நடத்தினர். 

விழாவிற்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தஞ்சாவூர் மாநகர தலைவர் அப்துல் நசீர் தலைமை வகித்தார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், மாவட்டத் தலைவரும் எலிசா நகர் பேராய கமிசரியுமான டாக்டர் எம். சூசைபால் அடிகளார் வரவேற்றார். கத்தோலிக்க திருச்சபை மீட்பு பணிகள் நிலைய இயக்குநர் அருட்திரு ஜான் கென்னடி அடிகளார், எஸ். எம். கென்னடி மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில், கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை நிறுவன தலைவர் ராஜா சீனிவாசன், லயன்ஸ் சங்கத் தலைவர் சம்பத், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில செயலாளர் பி. செந்தில்குமார், முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். எம். ஜெய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் களப்பிரன், தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி