தஞ்சை அருகே உள்ள பொட்டுவாச்சாவடி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் சபிதா. தமிழ் அஞ்சனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இதில், அந்த பகுதியில் உள்ள ஒருவர் தனது வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தஞ்சை அருகே உள்ள பொட்டுவாச்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் மால்வின் சகாயராஜ். (வயது 43). என்பது தெரியவந்தது. இவர் விற்பனைக்காக தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்ததஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார், 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் மால்வின் சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.