தஞ்சை: கால்நடை கணக்கெடுப்பு பணி.. கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு

74பார்த்தது
தஞ்சை: கால்நடை கணக்கெடுப்பு பணி.. கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில், 8 லட்சம் வீடுகளில் கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த பணியை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் 21-ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணி கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி முடிவடைந்தது. தஞ்சை மாவட்டத்தில் 8 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள 2 லட்சம் வீடுகளுக்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு மார்ச் இறுதி வரை கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 

இதை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் (சிறப்பு திட்டம்) டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் வல்லம், குலமங்கலம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தார். இதில், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் அப்துல்காதர், உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் சரவணன், கண்ணன், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் செரீப், தாமோதரச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி