தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடக்கும் பாசனவாய்க்கால்

68பார்த்தது
தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடக்கும் பாசனவாய்க்கால்
தஞ்சை அருகே தூர்வாரப்படாமல் பாசன வாய்க்கால் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ரூ. 115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 25. 41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 1210. 29 கி. மீ. நீளத்துக்கு 261 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போன்று தஞ்சையை அடுத்த சடையார் கோவில்பகுதியில் 1-ம் நம்பர் பாசன வாய்க்கால் உள்ளது. கல்லணைக்கால்வாயில் இருந்து இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் விடப்பட்டு விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்த நிலையில் 1-ம் நம்பர் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. பல இடங்களில் பாசன வாய்க்கால் கரைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அதுவும் பாசன வாய்க்கால்களுக்குள் கிடக்கின்றன. இதுவும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே தண்ணீர் திறக்கும் முன்பு இந்த பாசன வாய்க்காலை தூர்வாரி, உரிய நடவடிக்கை எடுக்க ெ செய்யப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி