கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2022-2023), கும்பகோணம் மாநகராட்சி, கடலங்குடி தெருவில், 41 வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக மையக் கட்டிடத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் திறந்துவைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.