தஞ்சை ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி கிளப் சார்பாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா நாஞ்சிக்கோட்டை சாலை ஏஒய்ஏ கிளப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், தஞ்சை மெயின் ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் வி.கே.வி நிறுவனம் வி.கே.கார்த்திக்கேயன், மஹாராஜா ரெடிமேட்ஸ் அர்சத் அஹமது, நேஷனல் பார்மா மருத்துவமனை முஜீபுர் ரஹ்மான், ஏஒய்ஏ கிளப் மார்ட்டின் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அனைத்து மதம், சமுதாயங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.