தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், நூற்றாண்டு விழா என்பது கருணாநிதி என்றால் தனி மனிதருக்கு அல்ல, திராவிட இயக்கத்தில் நீண்ட வரலாறு, நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் என மாறி சுயமரியாதை இயக்கம் உள்ளடக்கப்பட்டு
திமுக அரசியல் அமைப்பாக மாறி வந்திருக்கிறது. முதலமைச்சரின் பணி சாதாரண பணி அல்ல. அவரை பாராட்டுவது என்பது அவரை பெருமைப்படுத்துவதை விட சமுதாயத்தை உயர்த்த சமுதாயம் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான். தமிழ்நாட்டையும் திராவிடத்தையும் தாண்டி இந்தியாவே தற்போது இவரை நம்பிக் கொண்டிருக்கிறது. இவரது தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிக் கொண்டிருக்கிறார். அகில இந்திய தலைவர்களுக்கும் வழிகாட்டக்கூடிய அளவுக்கு உள்ளார். கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கினார், தனது தந்தை கருணாநிதி வழியை பின்பற்றி அண்ணாவழி பெரியார் வழி என ஈரோட்டுப்பாதை அகலமாகி கொண்டே செல்கிறது. அகில இந்தியாவிற்கு வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் மு. க.
ஸ்டாலின் உள்ளதால் எதிரிகள் இவரை கண்டு அஞ்சுகிறார்கள். எங்கே சென்றாலும் திமுகவின் ஞாபகம் நமது பிரதமருக்கு வருகிறது" இவ்வாறு பேசினார்