தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

81பார்த்தது
தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த அடிக்கல்லை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் எடுத்து வைத்தனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு ஜூன் 15 ஆம் தேதி வருகை தந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அடிக்கல் நாட்டுடன் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை தஞ்சாவூர் மாவட்ட மக்கள் விழாக்கோலத்துடன் கொண்டாடுவதற்காக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார் கோவி. செழியன். 

இதையடுத்து, அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தது: தமிழக முதல்வர் விமானம் மூலம் திருச்சிக்கு ஜூன் 15 ஆம் தேதி வந்து, தஞ்சாவூருக்கு வருகிறார். தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். மறுநாள் 16 ஆம் தேதி காலை திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரனின் தம்பி மகள் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, பின்னர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இதனிடையே, ரோடு ஷோ நிகழ்ச்சியும் உள்ளது. தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி நிகழாண்டு தொடங்கப்படும் என்றார் நேரு.

தொடர்புடைய செய்தி